ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 161 ஓட்டங்களை குவித்துள்ள டெல்லி அணி!

delhi capitals898 1599403573
delhi capitals898 1599403573

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 161 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 30 ஆவது போட்டி இன்றைய தினம் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமாகியது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி அணி சார்பில் ப்ரித்வி ஷா டக்கவுட்டுடனும், தவான் 57 ஓட்டங்களுடனும், ரஹானே 2 ஓட்டங்களுடனும், ஸ்ரேயஸ் அய்யர் 53 ஓட்டங்களுடனும், மார்கஸ் ஸ்டொய்னஸ் 18 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கரி 13 ஓட்டங்களுடனும், அக்ஸர் படேல் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க அஸ்வின் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் ஜோப்ர ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், உனாட் கட் 2 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.