பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள மிஸ்பா உல் ஹக்!

202001011535260867 It was a tough year for Pakistan in Tests Misbah ul Haq SECVPF
202001011535260867 It was a tough year for Pakistan in Tests Misbah ul Haq SECVPF

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார்.

லாகூரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மிஸ்பா உல் ஹக் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கு அணியை தேர்வு செய்த பின்னர், தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற உள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.