பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவி விலகல்!

1491474443 2095
1491474443 2095

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார்.

லாகூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மிஸ்பா உல் ஹக் இந்தத் தகவலை தெரிவித்தார்.

சிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கு அணியை தேர்வு செய்த பின்னர், தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற உள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.