19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக்கிண்ணம் தொடர்பில் இறுதித் தீர்மானம்!

77 3
77 3

அடுத்தாண்டு ஜனவரி மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண தொடர் தொடர்பில் இறுதித் தீர்மானம் நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக குறித்த தொடர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கிண்ண தொடர் முதல் முறையாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

20க்கு 20 ஆடவருக்கான உலகக்கிண்ண தொடர் மற்றும் மகளிருக்கான ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கிண்ண தொடர் கொரோனா காரணமாக 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.