பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு!

Umar Gul
Umar Gul

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் உமர் குல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

உமர் குல் ராவல்பிண்டியில் நடந்து வரும் தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.

அந்த அணி நேற்று முன்தினம் நடந்த தெற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டு அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இந் நிலையில் 36 வயதான உமர் குல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

உமர் குல் 2003 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி 47 டெஸ்டில் 163 விக்கெட்டும், 130 ஒருநாள் போட்டியில் 179 விக்கெட்டும், 60 இருபதுக்கு – 20 போட்டியில் 85 விக்கெட்டும் வீழ்த்தினார்.

2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கான அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

2009 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் அபாரமான ‘யோர்க்கர்’ பந்து வீச்சு மூலம் உமர் குல் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கிண்ணத்த‍ை வெற்றமைக்கு முக்கிய பங்காற்றினார்.