நீலங்களின் சமர் போட்டியில் இணை சம்பியனானது ஐயனார் மற்றும் தமிழ் யுனைற்றட் கழகம்

DSC00297
DSC00297

நீலங்களின் சமர் முக்கோண கடினப்பந்து சுற்றுப்போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் மற்றும் தமிழ் யுனைற்றெட் கழகம் இணை சம்பியனானது.

ஐயனார் விளையாட்டுக்கழகம், தமிழ் யுனைற்றெட் கழகம் மற்றும் ஸ்டார் பைட் கழகங்கள் இணைந்து நடாத்தும் நீலங்களின் சமர் கடினப்பந்து முக்கோண சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் தலைவர் அனுசன் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தார்.இதனையடுத்து தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தமிழ் யுனைற்றெட் கழகம் 16வது ஓவர் வரை துடுபெடுத்தாடிய வேளை மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டு 40 ஒவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் இடம்பெற்றிருந்தது.

DSC00289

இந்நிலையில் ஆட்டத்தின் 26ஆவது ஓவர் நிறைவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தமையால் ஆட்டத்தினை தொடர்ச்சியாக நடாத்த முடியாமையால் போட்டி நிறைவுக்கு வந்ததாக நடுவர்களினால் அறிவிக்கப்பட்டு இரு அணிகளும் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டது.

இதன் போது தமிழ் யுனைற்றட் கழக அணி 141 ஒட்டங்களுக்கு ஐந்து இலக்குகளை இழந்திருந்தது. அவ்வணி சார்பாக ஆட்டமிழக்காமல் ஜெயதிலக்க (இசுறு) 43 ஒட்டங்களையும் ஐயனார் விளையாட்டுக்கழகம் சார்பாக கு.அபிசன் மூன்று விக்கெட்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

DSC00280

வெற்றி பெற்ற இரு அணிகளுக்குமான இணை சம்பியன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக உடற்கல்வி விரிவுரையாளர் சிவசேகரம் ஆகியோர்களினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இப்போட்டி தொடரின் தொடர் நாயகன் மற்றும் சிறப்பாட்டக்காரராக தமிழ் யுனைற்றெட் கழக அணி வீரர் ஜெயதிலக்க (இசுறு) தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் விரர் கு.அபிசனுக்கு பத்து விக்கெட்களை எடுத்தமைக்காக சம்பியன் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC00223
DSC00277