இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து

7 1
7 1

இங்கிலாந்து கிரிக்கட் அணி அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்று பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், அவுஸ்திரேலியா தொடருக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி விபரம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.