நியூஸிலாந்து அணிக்கெதிரான பலம் மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு !

286521 620x330 1
286521 620x330 1

நியூஸிலாந்து அணிக்கெதிரானஇருபதுக்குஇருபது தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில், ஆந்ரே பிளெட்சர், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், உபாதைக்குள்ளாகியுள்ள சகலதுறை வீரர் டுவைன் பிராவோவுக்கு பதிலாக ரொமாரியோ செப்பர்ட் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல்போட்டி நவம்பர் 27ஆம் திகதி ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.