கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!

kkr 1599401665 1
kkr 1599401665 1

நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் தொடரின் 42 ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெருவே செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா 81 ஓட்டங்களையும் சுனில் நரைன் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக அன்ரிச் நோர்ட்ஜ், காகிசோ ரபாடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 195 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற்று5 9 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பாக அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்களையும் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 5 விக்கெட்களை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி தெரிவு செய்யப்பட்டார்.