போர்த்துகீசிய கிராண்ட் பிரிக்ஸ் காரோட்டப் போட்டி சம்பியன் வென்ற ஹெமில்டன்!

அல்கார்வ் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற போர்த்துகீசிய கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் 306 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை ஒரு மணி 16 நிமிடங்களில் கடந்து மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன் (Lewis Hamilton) சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மேலும், இதுவரை 92 முறை போர்மியூலா-1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஹெமில்டன், ஜெர்மனி வீரர் சூமாக்கரின் சாதனையை முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.