இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் Playoff சுற்றுத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு !

gftrrd
gftrrd

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் Playoff சுற்றுத் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை Playoff சுற்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தகுதிகாண் போட்டி நவம்பர் 5ஆம் திகதியும், வெளியேறும் அணிக்கான போட்டி நவம்பர் 6ஆம் திகதியும், இரண்டாவது தகுதிகாண் போட்டி நவம்பர் 8ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

அத்துடன், 13ஆவது IPL தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.