பஞ்சாப் அணியை தெறிக்க விடுமா கொல்கத்தா !

ElPGc5JWMAANhhA
ElPGc5JWMAANhhA

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46 போட்டிதற்சமயம் இடம்பெற்று வருகின்றது

இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் ஷார்ஜா சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகியுள்ளது

இதில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன

போட்டியில் நாணய சுழற்சியில்வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது இதன் அடிப்படையில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியானது தனக்கு வழங்கப்பட்ட 20 பந்து பரிமாற்றங்களில் ஒன்பது இலக்குகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுள்ளது

துடுப்பட்டத்தில் அணி சார்பில் சுப்மான் கில்57ஓட்டங்களையும் அணித்தலைவர் ஈயின் மோர்கன் 40ஓட்டங்களையும்அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தனர்

பந்துவீச்சில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 3 இலக்குகளை வீழ்த்தினார்

இந்த நிலையில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 11 போட்டிகளில் பங்கேற்றுள்ளன.

இதற்கமைய,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று இந்தியன் பிரீமியர் லீக் தரவரிசையில் நான்காவது இடத்தில் காணப்படுகின்றது.

அத்துடன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று ஐந்தாவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது