கொல்கத்தாவை பதம் பார்த்தது பஞ்சாப் அணி!

panjab 800x450 1
panjab 800x450 1

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் இன்றய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46 போட்டி இன்று (26) இடம்பெற்றிருந்தது

இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் ஷார்ஜா சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகியாது

இதில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன

போட்டியில் நாணய சுழற்சியில்வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது இதன் அடிப்படையில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியானது தனக்கு வழங்கப்பட்ட 20 பந்து பரிமாற்றங்களில் ஒன்பது இலக்குகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுள்ளது

துடுப்பட்டத்தில் அணி சார்பில் சுப்மான் கில்57ஓட்டங்களையும் அணித்தலைவர் ஈயின் மோர்கன் 40ஓட்டங்களையும்அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தனர்

பந்துவீச்சில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 3 இலக்குகளை வீழ்த்தினார்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிதமக்கு வழங்கப்பட்டஇருபது பந்து பரிமாற்றங்களில்18.2 பந்து பரிமாற்றத்தில் வெறும் 2 இலக்குகளைமாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது

துடுப்பட்டத்தில் அந்த அணி சார்பில் மந்தீப் சிங் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும் கிறிஸ் கெய்ல் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்

பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் லாக்கி பெர்குசன் ஒரு இலக்கினையும் வருண் சக்கரவர்த்தி ஒரு இலக்கினையும் வீழ்த்தினார்

போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ் கெய்ல் தெரிவானார்

இதேவேளை நாளையதினம் லீக் தொடரின் 47 போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும் ஹைதராபாத்-சன்ரைஸ் அணியும் பலபரிட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது