மெஸ்ஸியின் ஹட்ரிக் கோலுடன் பார்சிலோனா வெற்றி

messi1
messi1

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணிக்கும், செல்டா விகோ அணிக்குமிடையிலான போட்டியில் லயோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோலுடன் பார்சிலோனா அணி 4-1 என வெற்றி பெற்றுள்ளது.

சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியது. 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 42வது நிமிடத்தில் செல்டா விகோ ஒரு கோல் அடித்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 1-1 சமநிலையில் இருந்தது.

2வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் மெஸ்சி ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். 85வது நிமிடத்தில் செர்ஜியோ பஸ்குயட்ஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-1 என வெற்றி பெற்றது.

12 போட்டிகள் முடிவில் பார்சிலோனா 25 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ரியல் மட்ரிட், அத்லடிகோ மட்ரிட், செவில்லா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் தொடர்ச்சியாக வகிக்கின்றது.