தீபக் சகரின் ஹட்ரிக் பந்துவீச்சில் இந்திய அணி வெற்றி

ind
ind

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் மூன்றாவது போட்டியில் தீபக் சகரின் சிறந்த பந்துவீச்சுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 62 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சபியுல் ஸ்லாம், சௌமியா சர்கார் தலா இரண்டு விக்கட்டுக்களையும் அல் அமின் குசைன் ஒருவிக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 144 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, துடுப்பெடுத்தாட்டத்தில் மொஹமட் நயீம் மாத்திரம் அதிகபட்சமாக 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தீபக் சகர் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.

ஆட்டநாயகனாக ஹட்ரிக் உட்பட 6 விக்கட்டுக்களை கைப்பற்றிய தீபக் சகர் தெரிவு செய்யப்பட்டார்.