ஸிம்பாப்வே அணியை வீழ்த்தியது பாக்கிஸ்தான் அணி !

download 11 1
download 11 1

ஸிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஸிம்பாவே அணி சார்பில், Wesley Madhevere 70 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 18 தசம் 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில், Babar Azam 82 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இந்த நிலையில், போட்டியின் சிறப்பாட்டக்காரராக, Babar Azam தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.