லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

download 17
download 17

நாட்டில் நடைபெறவுள்ள LPL துடுப்பாட்ட தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில், எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி பிற்பகல் 3.30 இற்கு ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், இரவு 7.30 இற்கு முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கமைய, முதலாவது போட்டியில் Colombo Kings மற்றும் Kandy Tuskers ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அத்துடன், 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இவ்வாறு, 15 நாட்களில் மொத்தமாக 23 போட்டிகள் இடம்பெறவுள்ளன.