இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி

669e327a mumbai indians ipl2 1557305645 1598949027 1599399244
669e327a mumbai indians ipl2 1557305645 1598949027 1599399244

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில், சன்ரைஸஸ் ஐதரபாத் அணியை 17 ஓட்டங்களால் வெற்றிக்கொண்ட டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 190 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைஸஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் ஊடாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளது