அவுஸ்த்திரேலிய அணியுடனான போட்டிக்காக இந்திய அணியில் நடராஜன்!

natarajan
natarajan

அவுஸ்த்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் நாடு திரும்புவதற்கு இந்திய அணித்தலைவர் விராத் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திக ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி மனைவியின் மகப்பேற்றை அடிப்படையாக கொண்டு, அவருக்கு நாடு திரும்ப அனுமதி வழங்கபட்டுள்ளது.

இதேவேளை, அணித்தலைவர் விராட் கோலிக்கு பதிலாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா அணிக்கு மீளழைக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா உபாதைக் காரணமாக இந்த தொடரில் இருந்து முன்னதாக நீக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், இந்திய இருபதுக்கு20 அணியில் முதல் வாய்ப்பை பெற்ற, சுழல்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வருண்சக்ரவர்த்திக்கு தோள்ப்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, வருண்சக்ரவர்த்திக்கு பதிலான வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.