இந்திய துடுப்பாட்ட அணியின் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் ரோஹித் சர்மா என்கின்றார் கம்பீர் !

ro 720x450 1
ro 720x450 1

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 ஆகிய கிரிக்கெட் போட்டிகளில், ஏதேனும் ஒன்றுக்கு இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவது தற்போதைய நிலையில் பொருத்தமானதாக அமையுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கௌத்தம் கம்பீர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

IPL தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி அணியை எதிர்கொண்ட மும்பை அணிக்கு தனியாக 68 ஓட்டங்களை ரோஹித் சர்மா பெற்றுக்கொடுத்தார்.

மேலும், IPL தொடரில் இதுவரை 6 முறை செம்பியன் பட்டங்களை ரோஹித் சர்மா தான் தலைமைவகித்த அணிகளுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதிலே, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் 5 முறையும், 2009 ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் வெற்றியை உறுதி செய்து கிண்ணத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஆகவே, தலைமைத்துவத்திற்கு ரோஹித் சர்மா நியமிக்கபடாவிட்டால் அது இந்திய அணிக்கு பாரிய இழப்பாக அமையும் எனவும் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கௌத்தம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.