சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியீடு!

jokovic
jokovic

டென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கடந்த வாரம் நடைபெற்ற பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் முடிவடைந்த நிலையில், ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்…

இந்த பட்டியலில் தொடர்ந்தும் செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், 11,830 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

தொடர்ந்து ஸ்பெயினின் ரபேல் நடால் 9,850 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம் 9,125 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஜாம்பவான் ரோஜர் பெடரரை பின்தள்ளி 6,970புள்ளிகளுடன் ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர் ஒரு இடம் குறைந்து 6,630 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் ஸிட்சிபாஸ் 5,925 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் 5,525 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் 5,525 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

அர்ஜெண்டீனாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் 3,455புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும். இத்தாலியின் மெட்டியோ பெரிட்டினி 3,455 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.