இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை நடாத்துவதில் இந்தியா உறுதி!

World Cup 1
World Cup 1

2021ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை நடாத்த இந்தியா உறுதி பூண்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு ஒக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அவஸ்திரேலியாவில் நடத்தப்படவிருந்தது.

எனினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடரை எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் நவம்பர் வரையிலான அதே காலப்பகுதியில், இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடாத்த இந்தியா தற்போது தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.