‘பீச் வொலிபோல்’ போட்டியில் ஆண்கள் பிரிவில் நுவரெலியா மாவட்ட அணியை வெற்றி கொண்ட கண்டி மாவட்ட அணி!

9ca069741e547e12a207fecaf49f1d0d XL
9ca069741e547e12a207fecaf49f1d0d XL

மத்திய மாகாண மாவட்டங்களுக்கிடையே இடம் பெற்ற ‘பீச் வொலிபோல்’ போட்டியில் ஆண்கள் பிரிவில் கண்டி மாவட்ட அணி 2-0 என்ற சுற்று அடிப்படையில் நுவரெலியா மாவட்ட அணியை வெற்றி கொண்டது.

பெண்கள் பிரிவில் மாத்தளை மாவட்ட அணி 2-0 என்ற சுற்று அடிப்படையில் நுவரெலியா மாவட்ட அணியை வெற்றி கொண்டது.

மத்திய மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் ஜகத் கீர்த்தி அவர்களது ஏற்பாட்டில் விளையாட்டு அதிகாரி உபாலி ரத்னதிவாகர இப் போட்டிகளை ஒழுங்கு செய்திருந்தார்.

வெற்றி பெற்ற கண்டி அணிக்கு ரொசான் சமந்த கமககே தலைமை தாங்கியதுடன் நுவரெலியா ஆண்கள் அணிக்கு டி விஜந்தன் தலைமை தாங்கினர்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாத்தளை அணிக்கு சாலிகா ஶ்ரீமாலியம் இரண்டாம் இடத்தைப் பெற்ற நுவரெலியா மாவட்ட அணிக்கு எஸ் குவின்ஸ் உம் தலைமை தாங்கினர்.

உக்கவலை எஸ். பீ.யாலேகம மைதானத்தில் இடம் பெற்ற உக்குவலை பிரதேச இளைஞர் அணிகளுக்கிடையிலான பிரிதொரு கரப்பந்தாட்டப் போட்டியில் உக்குவலை பிரபுத்த அணி செம்பியனானது.

இப்போட்டியில் இறுதிப் போட்டியில் உக்குவலை பிரபுத்த அணியை எதிர்த்து நாகொல்ல சித்தார்த்த அணி விளையாடி தோல்வியடைந்தது.

உக்குவலை இளைஞர் சம்மேளனத் தலைவர் நிலங்க லக்மால் ஒழுங்கு செய்த இப்போட்டியில் பிரதம அதிதியாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொட கலந்துகொண்டார்.