மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ் நியமனம்!

201810121716054572 1 chase121018001 s. L styvpf
201810121716054572 1 chase121018001 s. L styvpf


நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் நிகோலஸ் பூரண், நியூஸிலாந்துக்கு எதிரான ரி-20 தொடரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதோடு அணியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, துணை தலைவராக இருந்த கிரேக் பிரத்வெயிட், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக இடம்பெற்றுள்ள ரோஸ்டன் சேஸுக்கு துணை தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. 28 வயதான ரோஸ்டன் சேஸ், 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை விளாசியிருப்பதோடு, சுழற்பந்து வீச்சின் மூலம் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 27ஆம் திகதி ஒக்லாந்தில் நடைபெறுகின்றது. அடுத்த இரண்டு போட்டிகளும் முறையே 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி ஹமில்டனிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.