கிரிஸ்டல் பேலஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவர் லூகாவுக்கு கொரோனா!

GettyImages 1148702641
GettyImages 1148702641

சேர்பிய கால்பந்தாட்ட வீரரும், கிரிஸ்டல் பேலஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவருமான லூகா மிலிவோஜெவிக் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனால் 29 வயதான லூகா மிலிவோஜெவிக், பெல்கிரேடில் இடம்பெறவுள்ள ஸ்கொட்லாந்துடனான 2020 யூரோ பிளே-ஒப் போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளானாலும், உடல் நிலை நன்றாகவுள்ள அவர், தற்போது செர்பியாவில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய அணியில் சேர்ந்த பிறகு மிலிவோஜெவிக் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டபோதே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் அணியின் ஏனைய வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.