இந்தியன் பிரீமியர்லீக் போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில்அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்

dravid e1562667810356
dravid e1562667810356

இந்தியன் பிரீமியர்லீக்போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021ம் ஆண்டில் 8ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2023ம் ஆண்டில் 10 ஆகவும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நீண்டகால திட்டம் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனரான ராகுல் டிராவிட் கூறும்பொழுது, திறமை அடிப்படையில் விரிவாக்கத்திற்கு ஐ.பி.எல். தயாராகி வருகிறது என நான் உணர்கிறேன்.

நிறைய திறமையான வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். நிறைய அணிகள் இருக்கும்பொழுது, அனைத்து திறமையான வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள். தரத்திலும் குறைவு இருக்காது என கூறியுள்ளார்.