சோபியா பகிரங்க டென்னிஸ் தொடரில் பட்டம் வென்று சாதனை படைத்த ஜன்னிக் சின்னர்!

202011150602411442 Sophia Open The young player who won the title and set the SECVPF
202011150602411442 Sophia Open The young player who won the title and set the SECVPF

சோபியா பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சோபியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி பல்கேரியா நாட்டில் நேற்று சனிக்கிழமை நடந்தது.

இறுதிப் போட்டியில் இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் மற்றும் கனடா நாட்டின் வாசிக் பொஸ்பிசில் ஆகியோர் மோதினர்.

போட்டியில் 6-4, 3-6, 7-6(3) என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்றார்.

இதனால் 19 ஆவது வயதில் முதன்முறையாக ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கெய் நிஷிகோரி தனது 18 ஆவது வயதில் டெல்ரே பீச் ஓபன் போட்டியில் ஆடவர் பிரிவில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.