டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான புதிய நடைமுறை

vNJslzTm 400x400
vNJslzTm 400x400

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான அணிகளைத் தெரிவு செய்ய புதிய முறைமை ஒன்றை பின்பற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்படி, ஒவ்வொரு அணிகளும் போட்டிகளின் மூலம் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதலாவது வெற்றியாளரைத் தெரிவு செய்யும் இறுதிப் போட்டி எதிர்வரும் 2021ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.