லங்கா பிரீமியர் லீக்கிற்கான பயிற்சியை நிறைவுசெய்தது யாழ்ப்பாணம் ஸ்டலியன்ஸ்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான பயிற்சிப் போட்டிகள் ஆரம்பித்துள்ள நிலையில் முழு அளவிலான பயிற்சியை நடத்திய முதல் அணியாக யாழ்ப்பாணம் ஸ்டலியன்ஸ் அணி உள்ளது.

அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான திலினா கண்டம்பியின் நேர்த்தியான வழிகாட்டலில், திஸர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டலியன்ஸ் அணி நவம்பர் 13 முதல் 15 வரை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மூன்று நாள் பயிற்சிகளை வெற்றிரகமாக நிறைவு செய்துள்ளது.

இந்த பயிற்சி அமர்வில் உள்ளூர் வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அணியில் உள்ளடக்கப்பட்டுள்ள உள்ளூர் வீரர்களின் விபரம்:

திஸர பெரேரா, வனிந்து ஹசரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டிசில்வா, சுரங்க லக்மால், பினுர பெர்னாண்டோ, மினோட் பானுக்க, மகேஷ் தீக்ஷனா, சரித் அசலங்கா, நுவிந்து பெர்னாண்டோ, கனகரத்னம் கபிலராஜ், தெய்வேந்திரம் தினோஷன் மற்றும் விஜேகாந்த் வியாஸ்காந்த்.

தலைமை பயிற்சியாளர் – திலினா கண்டம்பி ,ஆலோசகர் – ஹேமாங் பதானி , வேகப் பந்து வீச்சு பயிற்சியாளர் – மரியோ வில்லவராஜன் ,சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் – சச்சித் பதிரன , களத்தடுப்பு பயிற்சியாளர் – விமுக்தி தேஷபிரியா.

யாழ்ப்பாணம் ஸ்டலியன்ஸ் அணிக் குழாமில் வெளிநாட்டு வீரர்கள் ஆறு பேர் உட்பட மொத்தம் 20 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2020 எல்.பி.எல். எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை, சூரியவெவவில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.