லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெய்ல்!

5th ODI Gayle celebration
5th ODI Gayle celebration

‘யுனிவெர்ஸல் போஸ்’ என அழைக்கப்படும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற மாட்டார் என கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களினால் அவர் இந்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கெய்ல் அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி 288 ஓட்டங்களை குவித்தார்.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவும் இத் தொடரிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

கடந்த எட்டு மாதங்களாக அவர் பயிற்சி பெறாததன் காரணத்தினால் இந்த தீர்மானத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.