கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா !

Colombo Kings 3
Colombo Kings 3

லங்கன் பிரிமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ரவீந்தர்போல் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீரர் நேற்றையதினம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அன்ரூ ரசலுடன் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வௌிவந்துள்ள நிலையிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு ஹம்பாந்தோட்டை கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளி்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.