லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவதுபோட்டி இன்று !

Lanka Premier League 2020
Lanka Premier League 2020

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவதுபோட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று மாலை 6.50 மணிக்கு இந்த தொடரின் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் தொடரின் முதலாவது போட்டி இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இந்த தொடரை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.