முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி

hqdefault 1
hqdefault 1

லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை, கொழும்பு கிங்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது .

ஹம்பாந்தோட்டையில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது

இதன்படி, முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

220 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 219 பெற்ற நிலையில், போட்டி சமநிலையானது .

இதனையடுத்து வீசப்பட்ட சுப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 1 விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 17 என்ற வெற்றியிலக்கை நோக்கி சுப்பர் ஓவரில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தினேஷ் சந்திமால் தெரிவானார்.