அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று!

news 16 02 2019 13vv
news 16 02 2019 13vv

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

நேற்று முன்தினம் சிட்னி நகரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சிட்னியில் 2 ஆவது போட்டி நடைபெறுகிறது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச்முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

இப் போட்டியில் ஆஸி அணியில் ஸ்டொய்னிஸ்க்கு பதிலாக மோய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.