மாரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக மனுத்தாக்கல்

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல காற்பந்தாட்ட வீரரா மாரடேனா கடந்த 25ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து மாரடோனாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாரடோனாவின் தனி மருத்துவரின் சொத்து விபரம் குறித்து கணக்கெடுக்கவும், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.