டோக்கியோ விரிகுடாவில் மீண்டும் நிறுவப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையம்!

download 23
download 23

அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் விரைவுபடுத்தியுள்ளனர்.

அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பராமரிப்புப் பணிக்காக அகற்றப்பட்ட ஒலிம்பிக் வளையம் செவ்வாயன்று டோக்கியோ விரிகுடாவில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

15.3 மீற்றர் உயரமும் 32.6 மீற்றர் அகலமும் கொண்ட இந்த நினைவுச்சின்னம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக முதலில் நிறுவப்பட்டது.

எனினும் கொரோனா அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டமையினால் ஆகஸ்ட் மாதம் பராமரிப்பு பணிக்காக அது அகற்றப்பட்டு தற்சமயம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சின்னம் தற்சமயம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளமையினால் டோக்கியோவாசிகள் மற்றும் ரசிகர்களிடம் ஒலிம்பிக் போட்டி ஆரம்பம் தொடர்பான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக டோக்கியோ பெருநகர அரசாங்க திட்டமிடல் பணிப்பாளர் அட்சுஷி யனாஷிமிஜு தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு நிச்சயமாக 2020க்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நாங்கள் நடத்துவோம் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.