ஆப்கானிஸ்தானிடம் T20தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள்

Afghanistan vs afganistan
Afghanistan vs afganistan

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற T20 தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரை தீர்மானிக்கின்ற போட்டி நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று தொடரை இழந்தது.

குர்பாஸ் ஆட்ட நாயகன் விருதினையும், கரிம் ஜனத் தொடராட்ட நாயகன் விருதினையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியிருந்தது.