அபுதாபியில் நடந்து வரும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழாவில் 35 நிமிடங்கள் இடைவிடாமல் நடைபெற்ற வாணவேடிக்கை!

TBZHTUBTVBFBNDAL3EOFIYUIK4
TBZHTUBTVBFBNDAL3EOFIYUIK4

அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பெயரில் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலைபொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள், உணவுபொருட்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழா நடைபெறும் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 2 கின்னஸ் சாதனை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

முதலாவதாக 35 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற உலகின் மிக நீண்ட வாணவேடிக்கை என்ற தலைப்பிலும், 2-வதாக கிரண்டோலா வாணவேடிக்கை எனப்படும் வானில் சுழன்றுகொண்டே செல்லும் வகையில் நீண்ட நேரம் நடத்தப்பட்ட வாணவேடிக்கை என்ற தலைப்பிலும் இந்த சாதனை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 20ஆம் திகதி வரை நடைபெறுகிறது.