அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது குறித்து ஜப்பான் பரிசீலனை!

Japan emergency 720x450 1
Japan emergency 720x450 1

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த ஆளுநர்கள் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது குறித்து ஜப்பான் பரிசீலித்து வருகின்றது.

இருப்பினும் புதிய அறிவிப்பை வெளியிடத் தீர்மானிப்பதற்கு முன்னர் அரசாங்கம் சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என பொருளாதார அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பகுதியில் நிலைமை மிகவும் கடுமையானதாக உள்ளது என்ற கருத்தை அரசாங்கமும் ஆளுநர்களும் பகிர்ந்து கொண்டுள்ளமையினால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது அவசியம் என்ற ரீதியில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இடைக்கால நடவடிக்கையாக, டோக்கியோ பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் கரோக்கி பார்லர்களை இரவு 8 மணிக்கு மூடுமாறும், அதே நேரத்தில் மதுபான நிலையங்கள் இரவு 7 மணிக்கு மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும் நாடளாவிய ரீதியிலான அவசரகால நிலையை மீண்டும் பிரகடனப்படுத்துவதற்கான அழைப்புகளை பிரதமர் யோஷிஹைட் சுகா எதிர்த்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.0Shares