இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா மருந்துகள் 110 வீதம் பாதுகாப்பானவை

vikatan 2020 11 1b7b0962 d8fa 467a 9d70 92362bbd8071 injection 5722329 640
vikatan 2020 11 1b7b0962 d8fa 467a 9d70 92362bbd8071 injection 5722329 640

இந்தியாவில் இரண்டு வகையான கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்ற போதும், தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக்கப்படவில்லை.

புனேயில் உள்ள சேரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் நிறுவகத்தின் கொவிசீல்ட் தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் இந்தியாவின் மருந்துபொருள் ஒழுங்கு விதி சபை அனுமதியளித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானது என்று அதன் கட்டுப்பாட்டாளர் வி.ஜி. சோமானி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்புத் திறன் 70 சதவீதத்துக்கும் சற்று அதிகமானது என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இதனை அடுத்து கருத்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இந்தியத் தயாரிப்பு மருந்துகளே இந்தியர்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறித்து பெருமை அடைவதாக கூறியுள்ளார்.