டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கம்!

e5fdea5b 16d3 486c 8b26 8a61fd0916fe S secvpf.gif
e5fdea5b 16d3 486c 8b26 8a61fd0916fe S secvpf.gif

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதனை அங்கிகரிக்கும் வகையில் அதற்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியினை முற்றுகையிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்க காவல்துறையினர் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன், இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிவுகளை வெளியிட்டதாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கியுள்ளது.