62 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த விமானம் காணாமல் போன மர்மம்!கடலில் விழுந்ததாக தகவல்

1610240339 4275111 hirunews
1610240339 4275111 hirunews

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்து காணாமல் போனதாக கூறப்படும் பயணிகள் விமானம் கடலில் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

62 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்து 4 நிமிடங்களில் தொடர்பை இழந்த குறித்த விமானம் நேற்று காணாமல் போயிருந்தது.

இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா ஏயார் போயிங் ரக விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போனது.

இந்தநிலையில் குறித்த விமானம் கடலில் வீழ்வதை அவதானித்ததாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளதோடு மேலும் சில கடற்றொழிலாளர்களும் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடற்படையினர் விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தளபதி குறிப்பிட்டார்