இந்தோனேசிய விமானத்தின் கறுப்புபெட்டி கண்டுபிடிக்கப்பட்டது

indopla6 300x169 1
indopla6 300x169 1

62 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் காணாமல்போன இந்தோனேசிய விமானத்தின் கறுப்புபெட்டியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் உடற்பாகங்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஜே 182 விமானத்தின் கறுப்புபெட்டிகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.கூடிய விரைவில் அதனை மீட்கலாம் என எதிர்பார்க்கின்றோம் என இந்தோனேசியாவின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தாவின் கரையோரத்தில் உள்ள தீவுப்பகுதிகளில் 75 அடி ஆழத்தில் அவை காணப்பட்டன என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.