சர்வதேச ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகளவான கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 26 இலட்சத்து 99 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 3 இலட்சத்து 81 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்து அதி கூடிய தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட இந்தியாவில் 1 கோடியே 4 இலட்சத்து 51 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 1 இலட்சத்து 51ஆயிரத்து 48 பேர் உயிரிழந்துள்ளனர்.