அமீரகத்தில், ஒரே நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களிக் எண்ணிக்கை!

pcrtest 1024x576 1
pcrtest 1024x576 1

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 480 டி பி ஐ மற்றும் பி சி ஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 36 ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 195 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துதுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 6 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 24 ஆயிரத்து 947 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாட்டில் மொத்தம் 2 கோடியே 27 இலட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.