அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 இலட்சத்தைத் தாண்டியது!

202008280649151935 Corona infection can affect all organs medical experts SECVPF
202008280649151935 Corona infection can affect all organs medical experts SECVPF

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியை தாண்டியுள்ளது.

கொரோனா வைரசால் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.37 கோடியைத் தாண்டியுள்ளது. 91 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.