அரசியல் வாரிசுகள் சட்டத்தை மதிப்பதில்லை – நரேந்திர மோடி

wallpapersden.com narendra modi prime minister 1920x1280 696x464 1
wallpapersden.com narendra modi prime minister 1920x1280 696x464 1

அரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக ஆபத்து என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் புகுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தை முன்னிலைப்படுத்தாமல் குடும்ப அரசியல் சுயநலத்தையே முன்னிலைப்படுத்துவதாகவும் மோடி விமர்சித்தார். இத்தகைய அரசியல் வாரிசுகள் சட்டத்தை மதிப்பதில்லை என்றும் கூறிய பிரதமர் மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் சூழலில் இளைஞர்கள் அரசியலுக்கு வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.