இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய எரிமலை!

gettyimages 608873707 f359835d93ea4f0b95a50cbeeb839c05
gettyimages 608873707 f359835d93ea4f0b95a50cbeeb839c05

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற அனர்த்தங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

இங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 130 எரிமலைகள் உள்ளன.

இந்நிலையில் அதிக மக்கள் தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீற்றர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து 5.6 கிலோமீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது.

எரிமலை வெடிப்பு காரணமாக அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.‌ மேலும் எரிமலையில் இருந்து வரும் சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.