அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஜோ பைடன்!

biden 2 scaled 1
biden 2 scaled 1

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் (Joe Biden) நாளை பதவியேற்கிறார்.

அந்தவகையில் நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, தலைநகர் வொஷிங்டன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இராணுவத்தினர் 25 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளதுடன் காவற்துறையை சேர்ந்த 4000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் தமது பதவிக்காலம் நாளை நிறைவடைவதால், தனக்கு விடைகொடுக்க இராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இராணுவ தலைமையகமான பென்டகன் அதனை நிராகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.