அமெரிக்காவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

202004231410297095 Corona infection carry out PCR testing ICMR SECVPF
202004231410297095 Corona infection carry out PCR testing ICMR SECVPF

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 525 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 48 இலட்சத்து 06 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 02 ஆயிரத்து 768 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 11 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது.